

மின்வாரிய ஓய்வுபெற்றோர் நலச் சங்கம் சார்பில், நடப்பு ஆண்டுக்கான பொது உறுப்பினர் கூட்டம் திருப்பூரில் நடந்தது. துணைத் தலைவர் பி.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார்.
மருத்துவக் காப்பீடு குறித்தஉறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.மின்வாரியத்தை தனியார்மயமாக்கக்கூடாது.
மருத்துவக்காப்பீடு அட்டைவழங்கப்படாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.