பெரிச்சிக்கோவில், நல்லிப்பட்டி சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழாதிருப்பத்தூர் அருகே பெரிச்சிக்கோவில் வயிரவசாமி கோயிலில் அலங்காரத்தில் சனீஸ்வரர்.

பெரிச்சிக்கோவில், நல்லிப்பட்டி  சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழாதிருப்பத்தூர் அருகே பெரிச்சிக்கோவில் வயிரவசாமி கோயிலில் அலங்காரத்தில் சனீஸ்வரர்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பெரிச்சிக்கோவில் மற்றும் நல்லிப்பட்டி ஒற்றை சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

கண்டவராயன்பட்டி ஊராட்சி நல்லிப்பட்டியில் அமைந்துள்ள பழமையான சவுந்தரநாயகி நல்லூர் ஆண்டவர் கோயிலில் ஒற்றை சனீஸ்வரர் தனி சன்னதி உள்ளது. இக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு ஹோமத்துடன் விழா தொடங்கியது. சனீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. சுவாமி வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

விழாவில் கே.ஆர். பெரியகருப்பன் எம்எல்ஏ, டிஎஸ்பி பொன்ரகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சனிப் பெயர்ச்சி விழாவையொட்டி அதிகாலை 3 மணிக்கு ஹோமம் நடந்தது. தொடர்ந்து பூர்ணாகுதியும், சனீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகளும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in