தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக அச்சுவெல்லம் வழங்க வேண்டும் தஞ்சாவூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் கோரிக்கை

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக  அச்சுவெல்லம் வழங்க வேண்டும் தஞ்சாவூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் கோரிக்கை
Updated on
1 min read

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில், சர்க்கரைக்குப் பதி லாக அச்சுவெல்லம் வழங்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் பகுதியில் மாகாளிபுரம், வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், உள்ளிக்கடை, கணபதி அக்ரஹாரம், பட்டுக்குடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டு, அவர்களே அச்சுவெல்லம் தயாரிப் பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ளதால், அச்சுவெல் லம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில், நிகழாண்டு ரூ.2,500 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முந்திரி திராட்சை, கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து, அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்குப் பதிலாக அச்சுவெல்லம் வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கணபதி அக்ர ஹாரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜி.சீனிவாசன் கூறிய தாவது: எங்கள் பகுதியில் மட்டும் 200 குடும்பங்கள் அச்சுவெல்ல உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 6 மாதங்களாக அச்சுவெல்லம் உற் பத்தி செய்துவருகிறோம். தமிழகம் முழுவதும் ரேஷனில் வழங்க தேவையான அளவுக்கு, தமிழகத்தில் உள்ள உற்பத்தியாளர்களிடம் அச்சு வெல்லம் இருப்பு உள்ளது. 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை அச்சுவெல்லம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விலைபோகிறது. கரும்பு உற்பத்திக்கான உரம், வெட்டுவதற்கான கூலி போன் றவை உயர்ந்துள்ளதால், விவ சாயிகளுக்கு இந்த விலை முற்றிலும் கட்டுப்படியாகக் கூடியது அல்ல. இதனால், அச்சுவெல்ல உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.

இதுபோன்ற விவசாயிகளின் நஷ்டத்தை குறைக்கவும், அச்சுவெல்ல உற்பத்தித் தொழில் தொடர்ந்து நடைபெறவும் வழி செய்யும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக அச்சுவெல்லம் வழங்க வேண்டும். இதனால், இந்தத் தொழிலை நம்பியுள்ள விவசாயிகளின் உற்பத்தியும் அதிகரிக்கும். மேலும், பொங்கலுக்கு அரசு ரேஷனில் சர்க்கரையை வழங்கினாலும், பொதுமக்கள் பொங்கலிட வெளிச் சந்தையில் அச்சுவெல்லத்தை வாங்கிதான் பயன்படுத்த வேண்டும். எனவே, சர்க்கரைக்குப் பதிலாக அச்சுவெல்லம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in