திமுக கவுன்சிலர்கள் 2 பேர் அதிமுகவில் இணைகின்றனர் திருவெறும்பூர் ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு ஆபத்து?

திமுக கவுன்சிலர்கள் 2 பேர் அதிமுகவில் இணைகின்றனர் திருவெறும்பூர் ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு ஆபத்து?
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர்கள் சோழமாதேவி பூமதி, பொய்கைக்குடி முருகா ஆகியோர், அதிமுகவில் சேர்வதற்காக அக்கட்சியின் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமாரிடம் நேற்று விண்ணப்பப்படி வங்களை பெற்றுக் கொண்டனர். அப் போது, அதிமுக திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர்கள் ராவணன் (கிழக்கு), டி.கோவிந்தராஜ் (மேற்கு), வர்த்தகர் அணிச் செயலாளர் ராஜமணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத் தில் மொத்தமுள்ள 16 கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக கூட்டணியில் 10 பேரும், அதிமுக கூட்டணியில் 4 பேரும், சுயேச்சையாக 2 பேரும் வெற்றி பெற்றிருந்தனர். இதில், திமுகவைச் சேர்ந்த சத்யா ஒன்றியக்குழுத் தலைவ ராக உள்ளார்.

ஏற்கெனவே திமுக கவுன்சிலர் ஒருவர், சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் என 2 பேர் அதிமுகவில் இணைந்துவிட்டனர். இந்தநிலையில், மேலும் 2 திமுக கவுன் சிலர்கள் அதிமுகவுக்குச் செல்ல முடிவு செய்து, விண்ணப்பப் படிவங்களை பெற்றுச் சென்றுள்ளதால், திமுக ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in