விழுப்புரத்தில் இன்று பாஜக மாவட்ட மாநாடு மாநில தலைவர் முருகன் பங்கேற்பு

விழுப்புரத்தில் பாஜக சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
விழுப்புரத்தில் பாஜக சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

பாஜக விழுப்புரம் மாவட்டத் தலை வர் கலிவரதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

விழுப்புரத்தில் பாஜக மாவட்ட அணி பிரிவு மாநாடு இன்று (டிச. 27)நடைபெறுகிறது. இம் மாநாட்டில் மாநிலத் தலைவர் முருகன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்று, தமிழகத்தில் பாஜக ஆட்சிஅமைய ஆலோசனை வழங்க உள்ளனர்.எனவே இம்மாநாட்டில் அனைத்து அணி பிரிவு நிர் வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த மாநாட்டு ஒருங்கிணைப்பு நிகழ்வாக நேற்று முன்தினம் பாஜக நிர்வாகிகளிடையே விழுப்புரத்தில் ஆலோசனை நடைபெற்றது.

தொடர்ந்து விழுப்புரம், காந்திசிலை அருகே முன்னாள் பிரதமர்வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவ ரதன், மாவட்ட பொறுப்பாளர் குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகுமார், மாவட்ட பொருளாளர் சுகுமார், நகரத் தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட மகளிரணி தலைவர் சரண்யா, மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் ராஜலட்சுமி, ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் தாஸ சத்யன், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் சரவணன், நகர பொதுச் செயலாளர் சுகுமார், ஜோதி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in