

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்கக்கோரி எஸ்டிபிஐ கட்சியின் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் மதுரை கோரிப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கதிஜா பீவி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சமீமா வரவேற்றார். விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநிலச் செயலாளர் பாத்திமா கனி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்டப் பேச்சாளர் பிலால்தீன், திமுக வடக்கு மாவட்டத் துணைத் தலைவர் ஜவஹர், மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சிராஜ்நிஷா ஆகியோர் பங்கேற்றனர்.