

தமிழகம் முழுவதும் திமுகவினர் கிராம சபை கூட்டங்கள் நடத்திவந்த நிலையில், அக்கூட்டத்திற்கு தமிழக அரசால் தடை விதிக்கப் பட்டது.
இந்நிலையில், மரக்காணத் தில் நேற்று, ‘அதிமுகவை அகற்றுவோம்’ என்ற தலைப்பில் திமுகவினர் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தை நடத்தினர்.
கடற்கரை கிராம மக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார்.
இதற்கிடையே, கரோனா தொற்றை ஏற்படுத்தும் வகை யில் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ மஸ்தான் உட்பட 50 பேர் மீது மரக்காணம் உதவி காவல் ஆய்வாளர் விஜயகுமார் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மரக்காணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.