திண்டுக்கல் மாவட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

திண்டுக்கல் மாவட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸ்  சிறப்பு பிரார்த்தனை
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் மாவட்ட ஆயர் தாமஸ்பால்சாமி தலைமையில் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஏராளமானோர் கலந்துகொண்டு கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடினர்.

திண்டுக்கல் சி.எஸ்.ஐ., தூயபவுல் ஆலயத்தில் தலைமை போதகர் டேவிட் சன்பால்ஜேக்கப் தலைமையில் நேற்று அதிகாலை சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் பங்குத்தந்தை செல்வராஜ் தலைமையில் உதவிப் பங்குத்தந்தை பிரிட்டோ, அந்தோணி ஆகியோர் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.

மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in