மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு சிறந்த பணி 2 ஆசிரியர்களுக்கு தமிழக அரசு விருது

தமிழக அரசு விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஆட்சியர் இரா.கண்ணன்.
தமிழக அரசு விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஆட்சியர் இரா.கண்ணன்.
Updated on
1 min read

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாகப் பணியாற்றியதற்காக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டுள்ளது.

செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் கடந்த ஆண்டு சிறப்பாகப் பணியாற்றியதற்காக விருதுநகர் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ரா.நாகநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 2020-ம் ஆண்டுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் மன வளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக அருப்புக்கோட்டை வட்டம் பெல்கின்ஸ்புரத்தில் உள்ள சப்தகிரி அறிவுசார் குன்றிய இளம் சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மைய ஆசிரியர் ரா.ராமஜெயம் தேர்வு செய்யப்பட்டார்.

இவர்களுக்கு கடந்த 21-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் (தங்க பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றுகள்) வழங்கப்பட்டன.

விருது பெற்ற ஆசிரியர்கள் இருவரும் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணனைச் சந்தித்து நேற்று வாழ்த்துப் பெற்றனர். ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வசந்தராமகுமார் உடனிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in