பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சொர்க்க வாசல் வழியாக வந்து சேவைசாதித்த ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சொர்க்க வாசல் வழியாக வந்து சேவைசாதித்த ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி.
Updated on
1 min read

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, மத்திய மண்டலத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி யில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி யான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5.40 மணிக்கு நடைபெற்றது. அப்போது, ருக்மணி, சத்யபாமா சமேதராக வைரமுடி கிரீடம் அணிந்து சொர்க்க வாசல் வழியாக பிரவேசித்தார் ராஜகோபால சுவாமி. சொர்க்க வாசலில் வைகுண்ட நாதனாக பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார்.

இதேபோல, தஞ்சாவூர் நாலு கால் மண்டபம் வெங்கடேச பெருமாள்கோயில், நாதன்கோவில் ஜெகந்நாத பெருமாள் கோயில், நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோயில், காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில், பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில், கரூர் பண்டரிநாதன் சுவாமி பஜனை மடம், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நேற்று சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in