Regional02
திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம்
தஞ்சாவூரை அடுத்த புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் கிராமத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் செல்வகுமார் வரவேற்றார்.
கூட்டத்தில், ஞானம் நகர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். மழைநீர் வடிகால் வசதி செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனர்.
