

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் “உடலுறுதி இந்தியா மிதிவண்டி ஓட்டம்” என்ற நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில், தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பில் இன்று(26-ம் தேதி) ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளும் வகையில் ரோச் பூங்காவில் தொடங்கி முயல் தீவு வரை சென்று, மீண்டும் ரோச் பூங்காவை வந்தடையும் விதமாக 20 கி.மீ. சைக்கிள் ஓட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட் டமிடப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களுக்கு சொந்தமான சைக்கிள்களுடன் இன்று காலை 7 மணிக்கு ரோச் பூங்காவுக்கு வந்து “உடலுறுதி இந்தியா மிதிவண்டி ஓட்டம்” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.