கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வேலூர் ஆர்.சி.சர்ச் சாலையில் உள்ள விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் நேற்று அதிகாலை நள்ளிரவு கூட்டு திருப்பலி நடந்தது. இதனைத் தொடர்ந்து, இயேசு பிறப்பை மறை மாவட்ட நிர்வாகி ஜான் ராபர்ட் அறிவித்தார். அடுத்த படங்கள்: வேலூர் அண்ணா சாலையில் சிஎஸ்ஐ மத்திய ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பேராயர் ஷர்மா நித்தியானந்தம் சிறப்பு பிரார்த்தனை செய்தார். கடைசிப்படம்: இதில் திரளான கிறிஸ்தவர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.  படங்கள்: வி.எம்.மணிநாதன்

Updated on
1 min read

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங் களில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன.

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அனைத்து தேவாலயங்களும் விண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தேவா லயங்களில் அதிகாலை நடை பெற்ற சிறப்பு பிரார்த்தனையில் இயேசு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

வேலூர் விண்ணரசி மாதா பேராலயத்தில் அதிகாலை தொடங்கி விடிய, விடிய சிறப்பு பிரார்த்தனையும் நடை பெற்றது. மேலும், அங்கு அமைக் கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிசையை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். வேலூர் அண்ணா சாலையில் உள்ள சிஎஸ்ஐ மத்திய தேவாலயத்தில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், குடும்பம் குடும்பமாக ஏராளமானவர்கள் பங்கேற்றனர். குழந்தை இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் பொம்மைகளுடன் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டிருந்தது. இயேசு கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் வகையில் சிறப்பு நற்செய்தியும் வாசிக்கப்பட்டது. வேலூர், குடியாத்தம், ராணிப் பேட்டை, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in