

நண்பர்கள் 4 பேரும் விக்னேஷ் வீட்டில் தங்கிக் கொண்டு சங்கரன் கோவிலில் ஒர்க் ஷாப் வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயபாரத், குமரேசன், சுந்தர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது மேலநீலிதநல்லூர் விளக்கு பகுதியில் எதிரே வந்த கார் மோதியதில் 3 பேரும் காயமடைந்தனர். இந்நிலையில் மற்றொரு கார் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சுந்தர் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த குமரேசன், ஜெயபாரத்தை அங்குள்ளோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குமரேசன் உயிரிழந்தார். இதையடுத்து ஜெயபாரத் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சின்னகோவிலான்குளம் போலீஸார் விசாரிக்கின்றனர்.