

தியாகதுருகத்தை அடுத்த திம்மலை கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு 40 பேர், வாந்தி பேதி ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்த வந்து,அதைப் பருகியவர்கள் பாதிக்கப் பட்டதாக தெரிவித்தனர்.
இதில் கண்ணன் (60) என் பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்த கள்ளக் குறிச்சி ஆட்சியர் கிரண்குராலா, கிராமத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.