அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி இல்ல விழா முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி இல்ல விழா முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமியின் மகள் ஹரிணி, அமைச்சரின் கணவர் முருகனின் சகோதரி மகள் அனுசுயா ஆகியோரின் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமைச்சர் ராஜலெட்சுமி வரவேற்று பேசினார். தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துரையாற்றினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ, காமராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், அ.மனோகரன், மாவட்டச் செயலாளர்கள் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா (தென்காசி வடக்கு), தச்சை கணேசராஜா (திருநெல்வேலி), தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் எம்பிக்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக முதல்வருக்கு தென்காசி ஆட்சியர் சமீரன் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.

முதல்வருக்கு அதிமுக சார்பில் மேள தாளங்களுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சங்கரன்கோவில் நகரின் சாலைகள் அனைத்திலும் அதிமுக கொடிக் கம்பங்கள், தோரணங்கள் அமைக்கப்பட்டு விழாக்கோலமாக காட்சியளித்தது. விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in