திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகர செயலாளர்கள் கூட்டம்

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக  ஒன்றிய, நகர செயலாளர்கள் கூட்டம்
Updated on
1 min read

மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டார்.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 120-க்கும் மேற்பட்ட இடங்களில் கிராம சபைக் கூட்டத்தை சிறப்பான முறையில் நடத்த வேண்டும். அதிமுகவை நிராகரிப்போம் என்ற வாசகத்தை மக்கள் மனதில் பதிய வைத்து, ஏன் நிராகரிக்கிறோம் என்ற விளக்கத்தை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு திமுக செய்த திட்டங்கள், சாதனைகளை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புதிய வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் எண்ணத்தில் இருக்கும் பாஜக அரசை கண்டிப்பதோடு, போராட்டத்தின்போது உயிர்நீத்த விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in