திண்டுக்கல்லில் நீச்சல் பயிற்சிக்கு அனுமதி

திண்டுக்கல்லில் நீச்சல் பயிற்சிக்கு அனுமதி
Updated on
1 min read

கரோனா ஊரடங்கால் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த மார்ச் இறுதியில் நீச்சல் குளம் மூடப்பட்டது. இந்நிலையில் நீச்சல் பயிற்சி மேற்கொள்வோர் உரிய வழி காட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து பயிற்சி மேற்கொள்ளலாம் என ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், 12 வயதுக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ளலாம். முகக்கவசம் கட்டாயம். சமூக இடைவெளியுடன் பயிற்சி மேற்கொள்ளவேண்டும். ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து, அனுமதி பெற்று பயிற்சி மேற்கொள்ளலாம். நீச்சல் குளத்தில் கட்டணம் செலுத்தி குளிப்பவர்களுக்கும், நீச்சல் பயிற்சி முகாம்கள் நடத்தவும் அனுமதி கிடையாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in