தமிழ் இலக்கியத்தில் புலமை திருப்பத்தூர் சிறுவனுக்கு விருது

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வின்னர் விருது பெற்ற  மிதுன்வர்ஷன்.
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வின்னர் விருது பெற்ற மிதுன்வர்ஷன்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த 8 வயது சிறுவன் தமிழ் புலமையில் சாதனை படைத்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வின்னர் விருது பெற்றுள்ளார்.

திருப்பத்தூர் அஞ்சலக வீதியைச் சேர்ந்த தம்பதி ஜெயச்சந்திரன், இந்திரா பிரியதர்ஷினி. இவர்களது மகன் மிதுன்வர்ஷன் (8), அங்குள்ள குளோபல் இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கிறார்.

ஆங்கில வழியில் பயின்றாலும், அவருக்கு தமிழ் கற்கும் திறன் அதிகமாக இருந்தது. இதை அறிந்த அவரது பெற்றோர், சிறுவயதில் இருந்தே தமிழ் இலக்கியங்களை படிக்க பயிற்சி அளித்தனர். இந்நிலையில் இடைவிடாது அவர் 109 அவ்வையார் பாடல்கள் , 110 பாரதியார் பாடல்கள், 99 தமிழ் குறிஞ்சி மலர்கள் பெயர்களை ஒப்புவிக்கிறார்.

அவரது சாதனையைப் பாராட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வின்னர் நிறுவனம் விருது வழங்கியுள்ளது. அச்சிறுவனை பள்ளி ஆசிரியர்கள், தமிழார்வலர்கள் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in