பயோமெட்ரிக் இயந்திர குளறுபடியை கண்டித்து ரேஷன் கடை முன் மக்கள்,இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

பயோமெட்ரிக் இயந்திர குளறுபடியை கண்டித்து ரேஷன் கடை முன் மக்கள்,இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதி ரேஷன் கடைகளில் உள்ள பயோ மெட்ரிக் இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க 2 தினங்களாக மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைக்கண்டித்து நேற்று கிராம மக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராம ரேஷன் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோ மெட்ரிக் இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் கடந்த 2 நாட்களாக தவித்து வந்தனர்.

இதையடுத்து, பொதுமக்களை அலைக்கழிக்கமால் ரேஷனில் அத்தியாவசிய பொருட்கள் உரியநேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கிராம மக்கள் உக்கடை ரேஷன் கடை முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார்.

ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.எம்.குருமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாலு, கே.கே.சேகர், கிளை நிர்வாகிகள் எஸ்.அய்யாசாமி, கே.சுதாகர், அப்துல்கபூர், ஏ.பாலுசாமி, எம்.சத்தியசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in