

புலவன்காடு கிராமத்தில் நேற்று கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே புலவன்காடு கிராமத்தில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர். ஆனால், போலீஸார் அனுமதி மறுத்ததால் நேற்று புலவன்காட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல, ஆடுதுறையில், சூரியனார்கோவில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட போட்டோ எடிட்டிங் கலைஞர்கள் சங்கம், ஆடுதுறை காவேரி உழவர் மன்றம், ஆடுதுறை பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.