குரூப் 1 இலவச மாதிரி தேர்வு

குரூப் 1 இலவச மாதிரி தேர்வு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் இரா.வயலட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஜனவரி 3-ம் தேதி நடை பெறவுள்ளது. இதையொட்டி திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம் மற்றும் ஸ்மார்ட் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணை ந்து, வரும் 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணிவரை பாளையங்கோட்டை மைய நூலகத்தில் இலவச மாதிரி தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் பொது அறிவு பாடத்தில் 175 வினாக்கள், பொதுஅறிவு கூர்மை பகுதியில் 25 வினாக்கள் என்று மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். அதிக மதிப்பெண் பெறும் 8 பேருக்கு பரிசு வழங்கப்படும். தேர்வில் பங்கேற்க விரும்புவோர் 9626272890, 0462-2585226 என்ற எண்களில் தொடர்புகொண்டு பெயர்களை 26-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in