திமுக, மாதர் சங்கத்தினர் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
Updated on
1 min read

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து திமுக மற்றும் மாதர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது, எரிவாயு விலை உயர்வை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. இதில், திமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் லலிதா தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சமையல் எரிவாயு உருளையை பாடையில் வைத்து, அதற்கு மாலையிட்டு தாரை தப்பட்டை உடன் ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்க மாவட்ட செயலாளர் பிரசன்னா துணைச் செயலாளர் கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

தருமபுரி நகரில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக-வின் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திமுக மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.

கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏ-வுமான தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ, மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், பென்னாகரம் எம்எல்ஏ-வுமான இன்பசேகரன், மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் பரிதாநவாப் தலைமை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ, முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், நகர செயலாளர் நவாப், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் ஆகியோர் கண்டனவுரையாற்றினர்.

ஓசூர் மத்திகிரியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலாமேரி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மற்றும் ஓசூர் வட்ட மாதர் சங்க நிர்வாகிகள் மஞ்சுளா, ஜெயந்தி உட்பட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in