

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் ரயிலடியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநகரச் செயலாளர் இ.வசந்தி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் கலைச்செல்வி, மாவட்டச் செயலாளர் தமிழ்செல்வி, முன்னாள் மாவட்டத் தலைவர் மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
புதுக்கோட்டையில்...
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.சலோமி தலைமை வகித்தார்.
மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாவட்டத் தலைவர் பி.சுசீலா, பொருளாளர் எஸ்.பாண்டிசெல்வி, துணை செயலாளர் கே.நாடியம்மை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஜெயங்கொண்டத்தில்...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பத்மா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
மறியல்...
அரியலூர் பேருந்து நிலையம் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாக்கியம், ஒன்றியச் செயலாளர் எஸ்.மலர்கொடி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 28 பேரும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் கலையரசி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 182 பேரும் கைது செய்யப்பட்டனர்.