ஆம்னி பேருந்து மோதி சமையலர் உயிரிழப்பு

ஆம்னி பேருந்து மோதி சமையலர் உயிரிழப்பு
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார்(36). இவருக்கு மனைவி ரேகா, மகள் சண்மிகா(5), மகன் தஷ்வந்த்(2) ஆகியோர் உள்ளனர்.

தஞ்சாவூரில் உள்ள மன்னர் அரசு சரபோஜி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மாணவர் விடுதியில் சமையலராக பணியாற்றி வந்த வினோத்குமார், நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்து, வினோத்குமார் மீது மோதியதில் அந்த இடத்திலேயே அவர் இறந்தார்.

இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஆம்னி பேருந்து ஓட்டுநர் முகமதை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in