

தூத்துக்குடி புறநகர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற முற்றுகை போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் பூமயில்தலைமை வகித்தார்.
பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும்.பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர்.
ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்றவர்களை, பிரதான நுழைவாயிலை மூடி போலீஸார் தடுத்தனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அ ங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி பொன்னரசு தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனர்.
கோவில்பட்டி
நாகர்கோவில்