Published : 21 Dec 2020 03:16 AM
Last Updated : 21 Dec 2020 03:16 AM

கன்னியாகுமரியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டத்தை கண்டித்து கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா ஆலயம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய மீனவர்கள்.நாகர்கோவில்

மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயம் முன் ஊர் பங்கு மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அருட்தந்தை ஆன்றனி அல்காந்தர் தலைமை வகித்தார்.

இணை பங்குத் தந்தையர்கள் லெனின், ஷிபு, சுரேஷ், மற்றும் மீனவர்கள், பெண்கள் கலந்துகொண்டனர்.

இதுபோல் குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தலம் சார்பில் வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், புதிய மீன்வள மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தியும், தேசிய கல்விக் கொள்கையை கைவிடக்கோரியும் மவுன ஊர்வலம் நடைபெற்றது. பங்குத் தந்தை மரிய செல்வன், தெற்காசிய மீனவ தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் உட்பட பலர் கலந்து கொண்டனர். வேளாண் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு மரணமடைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x