

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் அகரம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அதேபகுதியைச் சேர்ந்த கோட்டீஸ்வரன் (48) என்பவர் தனது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து, மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்த காவல் துறையினர் கோட்டீஸ் வரனை கைது செய்தனர்.