

கும்பகோணம் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆ.மேக நாதன், க.தேவேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பாதுகாப்பு அலுவலர் என்.ரஞ்சித் உள்ளிட்ட குழுவினர், கும்பகோணம் பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், கும்பகோணம் சாக்கோட்டை முதன்மைச் சாலையிலுள்ள வெல்டிங் பட்டறையில் 14 வயதுக்குட்பட்ட சிறுவன் குழந்தைத் தொழிலாளியாகப் பணிபுரிந்தது கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டார்.
இதுதொடர்பாக, குழந்தைத் தொழிலாளியாக பணியமர்த்தி யவர் மீது குழந்தை, வளர் இளம் பருவ தொழிலாளர் (தடுப்பு, ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின்படி, குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் ந.க.தனபாலன் தெரிவித்துள்ளார்.