

இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி அம்பிகா விசாரித்து வந்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் அனிதா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
தீர்ப்பில், "குற்றவாளி காளிதாஸுக்கு போக்சோ சட்டத்தின்கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாத கால கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.