

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே ராஜாக்கள்பட்டி ஊராட்சி மறவபட்டி கிராமத்தில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக்கை சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் நேற்று திறந்து வைத்தார். இதில் மாவட்ட திட்ட அலுவலர் பொன்.பார்த்திபன், டாக்டர்கள் வளர்மதி, ஹமிதா, சுகாதார ஆய்வாளர்கள் ராமன், முருகன், ஊராட்சி மன்றத் தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர் கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.