பொதுக் கணக்கு குழுவுக்கு வானளாவிய அதிகாரம் குழு தலைவர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கருத்துதிண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்திய சட்டப்பேரவை பொதுக்கணக்குக் குழு தலைவர் துரைமுருகன் எம்.எல்.ஏ.,

பொதுக் கணக்கு குழுவுக்கு வானளாவிய அதிகாரம் குழு தலைவர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கருத்துதிண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்திய சட்டப்பேரவை பொதுக்கணக்குக் குழு தலைவர் துரைமுருகன் எம்.எல்.ஏ.,
Updated on
1 min read

சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுவுக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது என அக்குழுவின் தலைவர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழு ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. சட்டப் பேரவைச் செயலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி வரவேற்றார். கூட்டத்துக்குத் தலைமை வகித்த பொதுக் கணக்குக் குழுத் தலைவர் துரைமுருகன் பேசியதாவது: பொதுமக்களுக்கு நலத் திட்டங்களைச்செயல்படுத்த அரசால் ஒதுக்கப்படும் நிதி முறையாகச் செலவிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்கிறது. பொதுக் கணக்குக் குழுவுக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், ஆளுநரைத் தவிர மற்றவர்களை அழைத்து விசாரிக்க இந்தக் குழுவுக்கு அதிகாரம் உண்டு. இக்குழுவுக்குச் சரியான பதில் தராவிட்டால், மறைத்துப் பொய் பேசினால், இங்கேயே அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கலாம். சஸ்பெண்ட் செய்யலாம். அவருடைய பதவி உயர்வை நிறுத்தலாம், டிஸ்மிஸ் செய்யலாம். ஏன், மிகக் கொடூரமான குற்றமாக இருந்தால் சிறைக்குக்கூட அனுப்பலாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in