அரசு விழாவில் திமுக எம்எல்ஏ புறக்கணிப்பு? திருப்பத்தூர் அருகே திமுகவினர் முற்றுகை போராட்டம்

அரசு விழாவில் திமுக எம்எல்ஏ புறக்கணிப்பு? திருப்பத்தூர் அருகே திமுகவினர் முற்றுகை போராட்டம்
Updated on
1 min read

திருப்பத்தூரில் மினி கிளினிக் திறக்கும் விழாவில் திமுக எம்எல்ஏ புறக்கணிப்பட்டதால் திமுகவினர் விழா நடைபெறும் இடத்துக்குச்சென்று முற்றுகைப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மாடப்பள்ளி கிராமத்தில் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச் சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய குமார் உட்பட பலர் கலந்து கொண் டனர். ஆனால், இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் திமுக எம்எல்ஏநல்லதம்பியின் பெயர் சேர்க்கப் படவில்லை எனக்கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த எம்எல்ஏ நல்லதம்பி மற்றும் திமுகவினர் விழா நடந்த இடத்துக்கு நேற்று வந்தனர். நேராக மேடை அருகே சென்ற எம்எல்ஏ நல்லதம்பி ‘‘விழாவில் என்னுடைய பெயரை ஏன் புறக்கணித்தீர்கள்’’? என ஆட்சியர் சிவன் அருளிடம் கேள்வி எழுப்பினார். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதைக்கண்ட அமைச்சர் கே.சி.வீரமணி, திமுக எம்எல்ஏவை வெளி யேற்றும்படி எஸ்பி விஜய குமாருக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

உடனே, எஸ்பி விஜயகுமார் விழா மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து ‘நீங்கள் இங்கு இருந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வெளியில் செல்லுங்கள்’’ என்றார். இதனால், எம்எல்ஏவுக்கும், எஸ்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, காவல் துறை யினர் எம்எல்ஏ நல்லதம்பி மற்றும் திமுகவினரை அப்புறப்படுத்தினர். இதைக்கண்டித்து திமுகவினர் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து எம்எல்ஏ நல்லதம்பி கூறும்போது, “மாடப்பள்ளிக்கு மினி கிளினிக் வரவேண்டும் என கடும் முயற்சி செய்தவன் நான். திமுகவினர் செய்த நல்ல காரியங்கள் வெளி யில் தெரியக்கூடாது என இப்படிசெய்கிறார்கள். என்னுடைய தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில், மக்கள் பிரதிநிதியாக நான் பங்கேற்க இவர்களிடம் அனுமதி வாங்க வேண்டுமா ? மினி கிளினிக் அமைய இடமும், அதற்கான உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்தவன் நான். என்னால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என எஸ்பி கூறுகிறார். என்னால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று நிரூபித்தால் எம்எல்ஏ பதவியை இப்போதே ராஜினாமா செய்கிறேன்’’ என்றார்.

அரசு விழாவில் எம்எல்ஏ புறக்கணிக்கப்பட்ட சம்பவத்தால் மாடப்பள்ளியில் நேற்று சலசலப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in