

புதுச்சேரி அண்ணா நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் (65) இவர், விழுப்புரம் மாவட்டம் வானூர்அருகே உப்புவேலூர் பகுதியில் உரக்கடை நடத்தி வந்தார்.
இவர், கடந்த 2019-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்க அரசு மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவ தாக கூறி, நாமக்கலைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் (57) என்பரிடம் பணம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து சுந்தரராஜன் விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அப்புகாரில் தனது மகனுக்கு எம்பிபிஎஸ் படிக்க என்.ஆர்.ஐ கோட்டாவில் சீட் வாங் கித்தருவதாக நாமக்கல் பகுதியை சேர்ந்த புரோக்கர்கள் முரளி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் மூலம் அறிமுகமான பன்னீர்செல்வம் ரூ.63 லட்சம் பெற்றுக்கொண்டு மருத்துவக்கல்விக்கு இடம் வாங்கித்தரவில்லை. எனவே பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் சீனிவாசன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இப்புகாரின்பேரில் கிளியனூர் காவல்நிலையத்தினர் வழக்குபதிவு செய்து தந்தை மற்றும் மகன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.