

மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிபுகும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர் மணிவேல் தலைமை வகித்தார். போராட்டத்தில், திருச்செங்கோடு தாலுக்காவுக்கு உட்பட்ட மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் சுற்றுவட்டாரத்தில் வீட்டு வாடகை கொடுக்கமுடியாமல் அவதிப்படும் விவசாய மற்றும் நெசவுக் கூலித்தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.