

தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் பின்பகுதியில் ஏராளமான லாரிகள் நிறுத்தப்பட்டிருப்பது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் ஓட்டுநர்கள் லாரிகளை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
பின்னர், நேற்று காலை வந்து பார்த்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10 லாரிகளில் இருந்த பேட்டரிகள், அவற்றுடன் இணைந்திருந்த வயர்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.