

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்அருகேயுள்ள சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின கருத்தரங்கம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சுதா சீனிவாசன் தலைமை வகித்தார். மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் கென்னடி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஒருங்கிணைந்த சேவை மையம் அதிகாரி செலின்ஜார்ஜ் கலந்துகொண்டு பேசினார். மகிளா சக்தி கேந்திரா திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிப்பிரியா, சமூக செயற்பாட்டாளர் தமிழ்குட்டி, ஊராட்சிதுணைத் தலைவர் வைகைகரையன், வழக்கறிஞர் சீனிவாசன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் கலந்துகொண்டனர்.