உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கிக் கடன் உதவி

உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ், பால் உற்பத்தியாளர்களுக்கு நேற்று கடன் உதவிகள் வழங்கிய திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர்.
உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ், பால் உற்பத்தியாளர்களுக்கு நேற்று கடன் உதவிகள் வழங்கிய திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி, கனரா வங்கி மற்றும் ஆவின் நிறுவனம் சார்பில், உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தைச் சோந்த சுமார் 1000 விவசாயிகளுக்கு ரூ.3.16 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவியை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது, "இந்த செயல் மூலதனக் கடனானது ஆடு, மாடு, கோழிமற்றும் மீன் வளர்ப்பு ஆகிய அனைத்து விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் வழங்கப் படுகிறது.

இதற்கான வட்டி விகிதம் மத்திய அரசு வழிகாட்டுதலின் படி 4 சதவீதம்மட்டுமே. அனைத்து விவசாயி களும், இத்திட்டத்தைப் பயன் படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

கனரா வங்கி மண்டல துணைப் பொது மேலாளர் ஹரிநாராயணா, ஆவின் துணைப் பதிவாளர் பார்த்திபன் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in