லஞ்ச ஒழிப்பு சோதனை: மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு

லஞ்ச ஒழிப்பு சோதனை: மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு
Updated on
1 min read

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பொருட்களை ஏற்றி வரும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனு மதிப்பதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த 12-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பல சோதனைச்சாவடிகளில் சோதனை நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாபட்டு வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியிலும் சோதனை நடைபெற்றது. இதன் அடிப்படை யில் அங்கு மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றிய தீபா மீதுஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்சஒழிப்புத்துறை போலீஸார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in