

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில்வே காவல்நிலையத்தை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ரயில் நிலையங்களில் சேதமடைந்த காவல் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன," என்றார். டிஎஸ்பி கர்ணா, எஸ்ஐகள் நாச்சி, ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.