

பெரம்பலூர் மாவட்டம் குரும் பலூர் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் பிரியங்கா(8). நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டி ருந்த சிறுமி பிரியங்கா, வீட்டி லிருந்த கிரேயான் (மெழுகு) பென்சிலை கடித்து சாப்பிட்டு, சிறிது நேரத்தில் மயங்கி விழுந் தார்.
இதைக்கண்ட அவரது பெற்றோர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பிரியங்காவின் உடல்நிலை மேலும் மோசமானதால் நேற்று காலை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.