Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM

சிறுமி பலாத்காரம்: ஓய்வுபெற்ற விஏஓவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கங்கானிப்பட்டியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற விஏஓ கே.காடப்பன் (66). இவர், மனநலம் பாதித்த 13 வயது சிறுமியை கடந்த 2019-ல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து திருமயம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து காடப்பனை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி சத்யா, குற்றம் சாட்டப்பட்ட காடப்பனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x