திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு காதொலி கருவி வழங்கிய ஆட்சியர் சிவன் அருள். அருகில், சார் ஆட்சியர் வந்தனாகர்க் உள்ளிட்டோர்.
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு காதொலி கருவி வழங்கிய ஆட்சியர் சிவன் அருள். அருகில், சார் ஆட்சியர் வந்தனாகர்க் உள்ளிட்டோர்.

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் சிவன் அருள்

Published on

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் வந்தனாகர்க் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்து, 214 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடை யாள அட்டைகளையும், 2 பேருக்கு சக்கர நாற்காலிகள், ஒருவருக்கு சிறப்பு சக்கர நாற்காலி, 2 பேருக்கு காதொலி கருவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசும்போது, " மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், நவீன உபகரணங்கள் என பல்வேறு உதவிகளை வழங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வட்டார அளவில் தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது.

இதனை மாற்றத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த முகாமில் மாதாந்திர உதவித்தொகை கேட்டு 33 பேரும், தேசிய அடையாள அட்டை கேட்டு 105 பேரும் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

அந்த விண்ணப்பங்கள் மீது பரிசீலித்து அடுத்தடுத்து நடக்கும் முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவித்தொகை வழங்கப்படும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் முருகேசன், திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன், ஒர்த் டிரஸ்ட் மேலாளர் கணபதி, ஒருங்கிணைப்பாளர் சாந்தி, திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் காப்பக இயக்குநர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in