

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி (42). இவர், நேற்று தனது மகள் ஜெயசித்ராவுடன் இருசக்கர வாகனத்தில் காரணம்பேட்டை சென்றுவிட்டு, பிறகு திரும்பி யுள்ளார். காரணம்பேட்டை -பருவாய் சாலையில், ஜெயசித்ரா அணிந்திருந்த துப்பட்டா இருசக்கர வாகன சக்கரத்தில் சிக்கி விபத்து நிகழ்ந்தது.
இதில், இருவரும் தூக்கிவீசப் பட்டனர். சம்பவ இடத்திலேயே மீனாட்சி உயிரிழந்தார். காயங்க ளுடன் ஜெயசித்ரா தப்பினார். காமநாயக்கன் பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.