கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திரண்டனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முற்றுகை

கடலூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் இளங்கீரனை போலீஸார் குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.
கடலூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் இளங்கீரனை போலீஸார் குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.
Updated on
1 min read

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விஷயத்தில் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக நடப்பாகக் கூறி ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஜியோ கடைகள் முன்பு செல்போன் களை உடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூரில்அகில இந்திய விவசா யிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட கிளையின் சார்பில் நேற்று காத்திருப்புப் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். கடலூரில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜியோ நிறுவனத்தின் விற்பனை கடையை முற்றுகையிடும் போராட்டம் கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி

புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் ஊர்வலமாக வந்து, செல்போன்களை தரையில் போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி, சிந்தனைசெல்வன், அமுதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுவை - கடலூர் சாலையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் உள்ள வணிக வளாகத்திற்கு முன்பு கம்யூனிஸ்ட் (எஸ்யூசிஐ) சார்பில் முற்றுகை, ஆர்ப்பாட்டம் நடந்தது.புதுவை மாநில ஆம் ஆத்மி கட்சி சார்பில் சிவாஜி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in