விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கல்வி, வேலை வாய்ப்பில் 20% இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் கிராம நிர்வாக அலுவலகங்களில் பாமகவினர் மனு அளித்தனர்

கடலூர் அருகே நடுவீரப்பட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் பாமகவினர் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு முட்டி போட்டு மனு அளித்தனர்.
கடலூர் அருகே நடுவீரப்பட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் பாமகவினர் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு முட்டி போட்டு மனு அளித்தனர்.
Updated on
1 min read

தமிழ்நாட்டில் கல்வி மற்றும்வேலை வாய்ப்பில் வன்னியர்க ளுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கல்வி மற்றும்வேலை வாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்தியும் 4 நாட்கள் சென்னையில் தொடர் போராட்டம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன்பாகவும் நேற்று போராட்டம் நடைபெறும் என பாமக அறிவித்தது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 569 கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் கிராமத்தில் மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையிலும், அரகண்டநல்லூர் அருகே காட்டுப்பையூர் கிராமத்தில் மாநிலதுணைப்பொதுச் செயலாளர் தங்கஜோதி தலைமையிலும், செஞ்சி அருகே சே. பேட்டை, நெகனூர் கிராமங்களில் மாவட்ட செயலாளர் கனல்பெருமாள் தலைமையிலும், மேல்ம லையனூர், வளத்தியில் தலைமை ஆலோசனைக்குழுத்தலைவர் பேராசிரியர் தீரன் தலைமையிலும், வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் மாநில துணைப்பொதுச் செயலாளர் சிவகுமார் தலைமையிலும் நேற்று போராட் டம் நடைபெற்றது.

முட்டி போட்டு போராட்டம்

சிதம்பரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பாமக நகர தலைவர் ஞானகுருதலைமையில் மனு அளிக்கப்பட்டது. நிர்வாகிகள் கலியபெருமாள், அருள், ராஜேவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் மாநில செயற்குழு உறுப்பினர் பூக்கடை கண்ணன், நிர்வாகிகள் பாஸ்கர், சத்தியமூர்த்தி, மணிகண்டன், குணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர். பரங்கிப்பேட்டை அரியகோஷ்டி கிராமநிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமையில் மனு அளிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடுவீரப்பட்டில்கண்ணில் கருப்பு துணி கட்டி முட்டிப்போட்டு மாநில இளைஞர் சங்க துணைஅமைப்பு செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் கிராமநிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பழதாமரைக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 605 கிராம நிர்வாக அலுவலகங்களில் பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in