திருவள்ளூர் அருகே கார் ஓட்டுநர் கொலை தந்தை , மகன் கைது

திருவள்ளூர் அருகே  கார் ஓட்டுநர்  கொலை தந்தை , மகன் கைது
Updated on
1 min read

திருவள்ளூர் அருகே புதுசத்திரம் பகுதியில் கார் ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக தந்தை,மகன் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் அருகேஉள்ள புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (28). கார் ஓட்டுநரான இவரை நேற்று முன் தினம் இரவு, அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ், தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், சிறிது நேரத்தில் அசோக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது, இடுப்புப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு, ஆபத்தான நிலையில் அசோக்குமார் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

இதையடுத்து, பொது மக்கள் அசோக்குமாரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு,மருத்துவர்களின் பரிசோதனையில் அசோக்குமார் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த வெள்ளவேடு போலீஸார், முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், அசோக்குமாரை தன் அழைத்துச் சென்ற சதீஷின் தந்தைராஜா, சகோதரர் முத்து ஆகியஇருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அசோக்குமார் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடத்திவரும் போலீஸார், தலைமறைவான சதீஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை என்பதால், அசோக்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய காலதாமதமானது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதுசத்திரம் பகுதியில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் அசோக்குமாரின் உறவினர்கள் நேற்று மாலைசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடம் வந்த போலீஸார், உடனடியாக அசோக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என, உறுதியளித்தனர். ஆகவே, சிறிது நேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in