

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை ஒட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் விழா மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது.ரஜினிகாந்த் பிறந்தநாளை யொட்டி காட்டுவீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் பாபா மாதையன், சலீம்பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஆர்.முத்து, ரஜினிநாகராஜ், வழக்கறிஞர் பிரிவு கோவிந்தராஜ், மகளிரணி சுபலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத் தொடர்ந்து 5 ரோடு ரவுண்டானா பகுதியில் 70 கிலோ கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மேலும், இலவச மரக்கன்றுகள், அன்னதானம் வழங்கப்பட்டது. காவேரிப்பட்டணம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாச்சிக்குப்பம் கிராமத்தில் ரஜினிகாந்தின் பெற்றோர் நினைவகம் அமைக்கப்பட உள்ள இடத்தில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை, அன்னதானம் உள்ளிட் டவை வழங்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதி நகர, ஒன்றிய,கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.