

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் குறிஞ்சிப்பாடி திமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் முன் னிலை வகித்தார்.
திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள புகழேந்தி, திமுக பொறியாளர் அணி செயலாளர் சரவணன் எம்எல்ஏ, முன்னாள்சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழகம் மீட் போம்’ தேர்தல் பரப்புரையை கடலூர் மாவட்டத்திற்காக காணொ லிக் காட்சி மூலம் வரும் 17-ம்தேதி சிறப்புரையாற்றவுள்ளார்.
அதுசமயம், கடலூர் மாவட்டம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கூட்டத் தில் கலந்துக் கொண்டு உரையைக் கேட்க ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உரிய ஏற்பாடுகளை செய்திடுவது என முடிவு செய்யப் பட்டது.
கடலூர் கிழக்கு மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி’ என்ற மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்துக்காக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 20,21-ம் தேதிகளில் வருகை தர உள்ளார். மாவட்ட திமுக மூலம் அறிவிக்கப்படும் பயண நிகழ்வுகளை ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் சிறப்பாக நடத்திட கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். தொடர்ந்து அதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசு பாதிக்கப்பட்ட இடங்களில் வெள்ள நிவாரணமும், அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வலியுறுத்தப்பட்டது.