

சிவகங்கை அருகே கூட்டுறவு பட்டியைச் சேர்ந்தவர் பொன்னையா. விவசாயியான இவர் தனது தோட்டத்தில் விளைந்த பப்பாளிப் பழங்களை மினி லாரியில் ஏற்றிக் கொண்டு ராமநாதபுரம் சென்று கொண்டிருந்தார். சிவகங்கையில் நேற்று காலை மானாமதுரை- தஞ்சாவூர் புறவழிச் சாலை, மதுரை சாலை சந்திப்பில் மினி லாரி சென்றபோது மதுரையில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு தொண்டி சென்ற மினி வேன் மீது மோதியது. இதில் இரு வாகனங்களும் கவிழ்ந்தன. மேலும் இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் பொன்னையா, ஜெயபால் ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து டவுன் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.